காதல் வாழ்க்கையை குறித்து மனம் திறந்த விஜய் தேவரகொண்டா
|என்னுடைய காதல் அன்கண்டிஷனலானது இல்லை என்று நடிகர் விஜய் தேவரகொண்டா கூறியுள்ளார்.
அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக அறியப்பட்டார் விஜய் தேவரகொண்டா. தெலுங்கு திரையுலகில் பிரபல இளம் நடிகர்களில் விஜய் தேவரகொண்டா முக்கிய இடத்தில் இருப்பவர். இவர் சமீபத்தில் நடித்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் எதிர்ப்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.
கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படங்களில் நடிகை ராஷ்மிகா- விஜய் தேவரகொண்டா ஜோடி கலக்கியது. இருவரும் காதலிப்பதாக அடிக்கடி இணையத்தில் வைரலாவதும் குறிப்பிடத்தக்கது.
லைகர், தி பேமிலி ஸ்டார் திரைப்படங்கள் மக்களிடையே வரவேற்பை பெறவில்லை. சமீபத்தில் விஜய் தேவரகொண்டா சஹிபா என்ற இந்தி ஆல்பம் பாடலில் நடித்து இருந்தார். இதுக்குறித்த புரோமோஷன் நிகழ்ச்சியில் இவரது காதல் வாழ்க்கை குறித்து மனம் திறந்துள்ளார்.
அதில் அவர் "எனக்கு 35 வயது ஆகிறது, நான் சிங்கிளாக இருப்பேன் என நினைக்கிறீர்களா? என நகைச்சுவையாக கூறினார். மேலும் என்னுடன் நடித்த சக நடிகையை நான் டேட் செய்துள்ளேன் என ஒப்புக் கொண்டார். எனக்கு காதலிக்கப்படுவது எப்படிப்பட்ட உணர்வு என்று தெரியும், எனக்கு காதல் என்றால் என்னவென்றும் புரியும். என்னுடைய காதல் அன்கண்டிஷனலானது இல்லை. என்னுடைய காதல் சில கண்டிஷன்களுடன்தான் வரும்." என்றார்.