< Back
சினிமா செய்திகள்
Vijay Devarakondas VD12 to release in two parts, reveals producer Naga Vamsi
சினிமா செய்திகள்

இரண்டு பாகங்களாக விஜய் தேவரகொண்டாவின் 'விடி12' - தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்

தினத்தந்தி
|
28 Dec 2024 11:04 AM IST

இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருவதாக தயாரிப்பாளர் நாக வம்சி அப்டேட் கொடுத்துள்ளார்.

சென்னை,

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் கீதா கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் கடைசியாக 'பேமிலி ஸ்டார்' திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தற்போது விஜய் தேவரகொண்டா தன்னுடைய 12-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக 'விடி12' எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை கவுதம் தின்னனுரி இயக்குகிறார். சித்தாரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் படத்தை தயாரிக்க அனிருத் இசை அமைக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடிக்கிறார்.

தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருவதாக தயாரிப்பாளர் நாக வம்சி அப்டேட் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

'இது இரண்டு பாகங்களாக எடுப்பதற்கான கதை இல்லை. ஆனால், ஸ்கிரிப்ட் பணியின்போது இரண்டு பகுதிகளாக்கப்பட்டது. இரண்டாம் பாகத்தை எடுக்காவிட்டாலும், அது ஒரு பிரச்சினையாக இருக்காது. ஏனென்றால், இரண்டும் வெவ்வேறு கதைகள். முதல் பாகமே முழுமையாக இருக்கிறது' என்றார். இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 28-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்