< Back
சினிமா செய்திகள்
விஜய் ஆண்டனியின் ஹிட்லர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனியின் 'ஹிட்லர்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தினத்தந்தி
|
31 Aug 2024 8:44 PM IST

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'ஹிட்லர்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி இறுதியாக நடித்த 'ரோமியோ', 'மழைப்பிடிக்காத மனிதம்' திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது, 'படைவீரன்', 'வானம் கொட்டட்டும்' உள்ளிட்ட படங்களை இயக்கிய தனா இயக்கத்தில் 'ஹிட்லர்' என்கிற புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.

இதில் ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாக வெளியானது. இந்த நிலையில், இப்படம் செப்டம்பர் 27ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

மேலும் செய்திகள்