< Back
சினிமா செய்திகள்
விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி...புதிய தேதி அறிவிப்பு
சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி...புதிய தேதி அறிவிப்பு

தினத்தந்தி
|
2 Jan 2025 11:09 AM IST

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

சென்னை,

விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். 'காதலில் விழுந்தேன், வேட்டைக்காரன், அங்காடி தெரு' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருகிறார். இவர் 'காளி, நான், சைத்தான், பிச்சைக்காரன்' உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

விஜய் ஆண்டனி இசை நிகழ்ச்சி சென்னை ஏ.எம்.ஜெயின் கல்லூரி மைதானத்தில் கடந்த டிசம்பர் 28-ந் தேதி நடைபெற இருந்தது. ஆனால் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து விஜய் ஆண்டனியின் இசை கச்சேரி ரத்து செய்யப்பட்டது. இதுதொடர்பாக விஜய் ஆண்டனி வருத்தம் தெரிவித்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டிருந்தார். அதில் தேதியை குறிப்பிடாமல் நிகழ்ச்சி குறித்த தகவல் வெளியாகும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சியின் புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த நிகழ்ச்சி வருகிற 18-ந் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்