வேட்டையன் படத்தின் 'உச்சத்துல சூரியனா' வீடியோ பாடல் வெளியீடு
|கடந்த மாதம் வெளியான 'வேட்டையன்' படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
சென்னை,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த 10-ந் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான படம் 'வேட்டையன்'. இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்தும், என்கவுன்டரை எதிர்க்கும் வழக்கறிஞராக அமிதாப் பச்சனும் நடித்தனர். இந்த படம் கல்வி முறையில் உள்ள ஓட்டைகள் குறித்தும் போலி என்கவுன்டர் குறித்தும் பேசுகிறது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் உலகளவில் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இப்படத்தில், அனிருத் இசையமைத்த 'மனசிலாயோ' பாடல் வெளியீட்டுக்கு முன்பே பெரிய கவனம் பெற்றதுடன் இன்ஸ்டாகிராமில் அதிக அளவில் ரீல்ஸ் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து தற்போது இப்படத்தின் 'உச்சத்துல சூரியனா' என்ற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலுக்கு யோக பாரதி பாடல் வரிகளை எழுதியுள்ளார். மேலும் சீன் ரோல்டன் இந்த பாடலை பாடியுள்ளார்.