'விடாமுயற்சி': தீம் இசை குறித்து அனிருத் உற்சாகம்
|'விடாமுயற்சி' படத்தின் டீசர் நேற்று வெளியானது.
சென்னை,
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். மகிழ்த்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 'விடாமுயற்சி' வெளியாகிறது. இப்படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி வைரலாகின.
இதனையடுத்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'விடாமுயற்சி' படத்தின் டீசர் நேற்று வெளியானது. டீசரில் எல்லோரும் எல்லாமும் கைவிடும்போது உன்னை நம்பு.... என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், 'விடாமுயற்சி' படத்தின் தீம் இசை குறித்து அனிருத் உற்சாக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், 'விடாமுயற்சி' பட தீம் இசையில் வரும் கடைசி பகுதிக்கு தியேட்டரில் ரசிகர்களின் ஆரவாரத்திற்கு காத்திருக்கிறேன்' இவ்வாறு தெரிவித்துள்ளார். விடாமுயற்சி திரைப்படம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது.