ராஜ்குமார் ஹிரானியுடன் மீண்டும் இணையும் விக்கி கவுசல்?
|பாலிவுட் நடிகரான விக்கி கவுசல், தற்போது 'சாவா' படத்தில் ராஷ்மிகா மந்தனாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
சென்னை,
பிரபல பாலிவுட் நடிகரான விக்கி கவுசல், தற்போது சஞ்சய் லீலா பஞ்சாலி இயக்கத்தில் 'லவ் அண்ட் வார்' படத்திலும், லக்சுமன் உடேகர் இயக்கும் 'சாவா' படத்தில் ராஷ்மிகா மந்தனாவுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார். இதில், 'லவ் அண்ட் வார்' படம் 2026-ம் ஆண்டு மார்ச் 20-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மறுபுறம் 'சாவா' படம் அடுத்த மாதம் 6-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தநிலையில், 5-ம் தேதி அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஸ்பா 2 படம் வெளியாவதால் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. இப்படங்களைத்தொடர்ந்து, அமர் கவுசிக் இயக்கும் 'மகாவதாரம்' படத்திலும் விக்கி கவுசல் நடித்து வருகிறார்.
இந்நிலையில், விக்கி கவுசலின் அடுத்த படம் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, பிரபல இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் விக்கி கவுசல் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, ஸ்கிரிப்ட் பணிகள் நடைபெற்றுவருவதாக தெரிகிறது. விரைவில் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
விக்கி கவுசல் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த 'டுன்கி' படத்தை ராஜ்குமார் கிராணி இயக்கி இருந்தார். தற்போது இருவரும் மீண்டும் இணைய இருப்பதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.