< Back
சினிமா செய்திகள்
Vicky Kaushal as Parashurama - First look poster released by Mahavatar team
சினிமா செய்திகள்

பரசுராமராக விக்கி கவுசல் - பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட 'மகாவதாரம்'படக்குழு

தினத்தந்தி
|
13 Nov 2024 5:10 PM IST

'மகாவதாரம்' படத்தை ஸ்ட்ரீ 2 இயக்குனர் அமர் கவுசிக் இயக்குகிறார்.

சென்னை,

பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கவுசல். இவர் தற்போது சஞ்சய் லீலா பஞ்சாலி இயக்கத்தில் 'லவ் அண்ட் வார்' படத்திலும், லக்சுமன் உடேகர் இயக்கும் 'சாவா' படத்திலும் நடித்து வருகிறார். இதில், 'லவ் அண்ட் வார்' படம் 2026-ம் ஆண்டு மார்ச் 20-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மறுபுறம் 'சாவா' படம் அடுத்த மாதம் 6-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 5-ம் தேதி அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஸ்பா 2 படம் வெளியாவதால் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. இப்படங்களைத்தொடர்ந்து, விக்கி கவுசல் நடித்து வரும் படம் 'மகாவதாரம்'.

இப்படத்தை அமர் கவுசிக் இயக்குகிறார். இவர் சமீபத்தில் ஷ்ரத்தா கபூர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த ஸ்ட்ரீ 2 படத்தை இயக்கி இருந்தார். இந்நிலையில், 'மகாவதாரம்' படத்தில் பரசுராமராக நடிக்கும் விக்கி கவுசலின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் 2026-ம் ஆண்டு கிரிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்