< Back
சினிமா செய்திகள்
பழம்பெரும் நடிகர் மனோஜ் மித்ரா காலமானார்
சினிமா செய்திகள்

பழம்பெரும் நடிகர் மனோஜ் மித்ரா காலமானார்

தினத்தந்தி
|
12 Nov 2024 4:00 PM IST

86 வயதான பழம்பெரும் நடிகர் மனோஜ் மித்ரா காலமானார்.

கொல்கத்தா,

மேற்குவங்காளத்தை சேர்ந்த பழம்பெரும் நடிகர் மனோஜ் மித்ரா (வயது 86). வங்காள மொழியில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள மனோஜ் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார்.

இந்நிலையில், வயது முதிர்வு, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மனோஜ் மித்ரா கடந்த 3ம் தேதி கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மனோஜ் மித்ரா இன்று காலை 9 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகர் மனோஜ் மித்ராவின் மறைவிற்கு அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்