< Back
சினிமா செய்திகள்
வெங்கட் பிரபுவின் பார்ட்டி திரைப்படம் டிசம்பர் மாதம் ரிலீஸ்!
சினிமா செய்திகள்

வெங்கட் பிரபுவின் 'பார்ட்டி' திரைப்படம் டிசம்பர் மாதம் ரிலீஸ்!

தினத்தந்தி
|
9 Sept 2024 7:25 PM IST

வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள 'பார்ட்டி' திரைப்படம் டிசம்பரில் வெளியாகும் என்று தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

2018-ம் ஆண்டு அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டுக்கு தயாரான படம் 'பார்ட்டி'. டி.சிவா தயாரித்த இந்தப் படத்தை வெங்கட்பிரபு இயக்கியிருந்தார். முழுக்க பிஜி தீவில் படமாக்கப்பட்ட இதில் சத்யராஜ், ஜெய், ஷாம், ஜெயராம், நாசர், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்துராஜ், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி என பெரிய பட்டாளமே நடித்திருந்தது.

பிஜியில் இருந்து வரவேண்டிய சான்றிதழ் தாமதத்தினால் இந்தப் படம் வெளியீடு தடைப்பட்டது. அங்கும் வேறொரு அரசாங்கம் பதவியேற்றது. இதனால் சான்றிதழ் கிடைப்பதில் குழப்பம் ஏற்பட்டது. தற்போது வெங்கட்பிரபு இயக்கியுள்ள 'தி கோட்' படம் வசூலில் சாதனை செய்து வருகிறது.

மீண்டும் 'பார்ட்டி' பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் சான்றிதழைப் பெற்று படத்தை வெளியிட வேண்டும் என்ற முனைப்பில் தயாரிப்பு தரப்பு இறங்கியிருக்கிறது. டிசம்பரில் பட வெளியீடு இருக்கும் என்று டி.சிவா அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

'பார்ட்டி' படத்துக்காக நடிகர்கள் சூர்யா, கார்த்தி இருவரும் சொந்த குரலில் ஒரு பாடலை பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்