நடிகை துஷாராவின் பிறந்தநாளையொட்டி `வீர தீர சூரன்' படக்குழு வெளியிட்ட சிறப்பு போஸ்டர்
|நடிகை துஷாராவின் பிறந்தநாளையொட்டி `வீர தீர சூரன்' படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது. வேட்டையன் படக்குழு பிறந்தநாள் வாழ்த்துகளை பகிர்ந்து வீடியோ வெளியிட்டுள்ளது.
சென்னை,
இரட்டை மூக்குத்தி, கிராமத்து அடாவடியாக 'சார்பட்டா' படத்தில் ஆர்யாவுக்கு நிகராக, கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்து நடித்தவர் துஷாரா விஜயன். அந்தப் படம் வெளியான சமயம், 'மாரியம்மா... மாரியம்மா...' என்று செல்லும் இடமெல்லாம் அன்புடன் அழைக்கப்பட்ட அழகிய நாயகி.
தமிழில் தனுஷ், ஆர்யா, ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள துஷாரா விஜயன், நடிப்பில் சமீபத்தில் அடுத்தடுத்து ராயன் மற்றும் வேட்டையன் படங்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளன.
சேதுபதி, சித்தா படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62 - வது படமான 'வீர தீர சூரன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு 'வீர தீர சூரன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக விக்ரமின் பிறந்த நாள் அன்று படக்குழு டீசர் வெளியிட்டு அறிவித்தது. மேலும், தற்போது இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு, படத்தின் முதல் பாகம் உருவாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. அந்த வகையில், வீர தீர சூரன் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதை படக்குழு உறுதி செய்துள்ளது.
நடிகை துஷாராவின் பிறந்தநாளையொட்டி `வீர தீர சூரன்' படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது.
வேட்டையன் படக்குழு சார்பில் லைகா நிறுவனம் அவருக்கு எக்ஸ் தள பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துகளை பகிர்ந்து வீடியோ வெளியிட்டுள்ளது.