'வீர தீர சூரன்', 'இட்லி கடை'...- ஜி.வி.பிரகாஷ் கொடுத்த அப்டேட்!
|தனுஷ் இயக்கும் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்', 'இட்லி கடை' ஆகிய படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவர் சமீபத்தில் வெளியான அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் படங்களுக்கு இசையமைத்திருந்தார். இவ்விரு படங்களுமே நல்ல வரவேற்பைபெற்று வருகின்றன.
இதனைத்தொடர்ந்து இவர், விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன்' படத்திற்கு இசையமைத்து வருகிறார். இதற்கு முன் விக்ரம் நடிப்பில் வெளியாகி வசூல் வேட்டை நடத்திய 'தங்கலான்' படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ்தான் இசையமைத்திருந்தார்.
இது மட்டுமில்லாமல், தனுஷ் இயக்கும் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்', 'இட்லி கடை' ஆகிய படங்களுக்கும் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். மேலும், கமல்ஹாசன் இயக்கும் 'கிங்ஸ்டன்' படத்தில் கதாநாயகனாகவும் ஜி.வி.பிரகாஷ் நடித்து வருகிறார்.
இந்நிலையில், 'வீர தீர சூரன்', 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்', 'இட்லி கடை', 'கிங்ஸ்டன்' ஆகிய 4 படங்களின் பெயர்களையும் குறிப்பிட்டு தனது எக்ஸ் பக்கத்தில் அப்டேட் கொடுத்துள்ளார்.