< Back
சினிமா செய்திகள்
விடுதலை 2 படத்தில் வாத்தியார் என்பது நானோ, விஜய்சேதுபதியோ இல்லை - வெற்றிமாறன்
சினிமா செய்திகள்

விடுதலை 2 படத்தில் 'வாத்தியார்' என்பது நானோ, விஜய்சேதுபதியோ இல்லை - வெற்றிமாறன்

தினத்தந்தி
|
27 Nov 2024 8:25 AM IST

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'விடுதலை 2' படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.

சென்னை,

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'விடுதலை'. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது.

இதில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து பிரகாஷ்ராஜ், சேத்தன், மூணார் ரமேஷ், பவானிஶ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல், மஞ்சுவாரியர், கிஷோர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கும் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். மேலும், நடிகர் எஸ்.ஜே.சூர்யா விடுதலை - 2 பாகத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 20-ந் தேதி வெளியாக உள்ளது.

இதற்கிடையில் நேற்று சென்னையில் இப்படத்தின் இசை, டிரெய்லர் வெளியீடு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர்கள் சூரி, விஜய்சேதுபதி பங்கேற்றார்கள். விழாவில் பேசிய இயக்குனர் வெற்றி மாறன், "ஒரு படம் எடுப்பதற்கு நிறைய உழைப்பு தேவை. எங்கள் படக்குழுவினர் அதற்கான உழைப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர். சுமார் 257 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அதில் விஜய் சேதுபதி கிட்டத்தட்ட 120 நாட்கள் நடித்திருப்பார்.

ஒரு படம் நல்ல படமாக மாறுவதற்கு அந்தப் படத்தின் படக்குழுதான் காரணம். இப்படத்தில் 'வாத்தியார்' என்பது விஜய் சேதுபதியோ, நானோ இல்லை. விடுதலை என்பது தான் வாத்தியார். அது தான் மையக்கரு. படம் முடியும் போது நிறைய விஷயங்களை கத்துக்கொள்வோம், மேலும் என் குடும்பத்துக்கும் என்னுடைய குழுவுக்கும் நன்றி" என்று பேசியிருக்கிறார்.

மேலும் செய்திகள்