'ஆலியா பட்டுடன் பணிபுரிந்தபோது...' - 'ஜிக்ரா' பட அனுபவத்தை பகிர்ந்த இயக்குனர்
|ஆலியா பட்டுடன் பணிபுரிந்த அனுபவத்தை இயக்குனர் வாசன் பாலா பகிர்ந்துகொண்டார்
சென்னை,
பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் ஜிக்ரா. இப்படத்தை வாசன் பாலா இயக்கி இருந்தார். ஆலியா பட்டுடன் வாசன் பாலா பணியாற்றிய முதல் படம் இதுவாகும்.
இப்படத்திற்கு நேர்மறையான விமர்சனம் கிடைத்திருந்தாலும், போதுமான அளவு வசூல் செய்யவில்லை. இந்நிலையில், ஆலியா பட்டுடன் பணிபுரிந்த அனுபவத்தை இயக்குனர் வாசன் பாலா பகிர்ந்துகொண்டார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
'ஒரு இயக்குனரின் உள்ளுணர்வை அழகாக புரிந்து வைத்திருப்பவர் ஆலியா பட். அவருடன் ஜிக்ரா படத்தில் பணிபுரிந்தபோது இதனை தெரிந்துகொண்டேன். அவர் எப்போதும் தயாராக இருப்பார். ஒரு காட்சி எப்படி வரவேண்டும் என்று நான் நினைக்கிறேனோ, அதை அவருக்கு ஒரு சைகை மூலம் தெரிவித்தாலே போதும் அதை அவர் புரிந்துகொண்டு சரியாக செய்வார். எல்லா இயக்குனருக்கும் ஆலியாவுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்' என்றார்.