< Back
சினிமா செய்திகள்
வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் தி வெர்டிக்ட் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
சினிமா செய்திகள்

வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் "தி வெர்டிக்ட்" பர்ஸ்ட் லுக் போஸ்டர்

தினத்தந்தி
|
23 March 2025 7:05 PM IST

வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‛தி வெர்டிக்ட்’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சென்னை,

அக்னி என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் மோகன் தாஸ் என்பவர் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கிருஷ்ணா சங்கர் இயக்கியுள்ள படம் ‛தி வெர்டிக்ட்'. வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுகாசினி, வித்யுலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன்தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் கொலையும் கொலை சார்ந்த புலனாய்வுக் கதையாக உருவாகி உள்ளது.

சரத்குமார் 'தி வெர்டிக்ட்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுகாசினி, வித்யுலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன்தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். 'தி வெர்டிக்ட்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் கிருஷ்ணா சங்கர்.

படத்தை எழுதி இயக்கியுள்ள அறிமுக இயக்குநர் கிருஷ்ணா சங்கர் படத்தைப் பற்றி பேசும்போது,"ஒரு பணக்கார அமெரிக்க பெண் கொலை ஆகிறாள். அவளுடன் நட்பு பாராட்டி வந்த இன்னொரு பெண் அந்தக் கொலை வழக்கில் சிக்கிக் கொள்கிறாள்.அவளது கணவர் சிக்கலில் மாட்டியுள்ள தன் மனைவியை மீட்கப் போராடுகிறார்.ஒரு பாவமும் அறியாத தன் மனைவி ஒரு நிரபராதி, என்று நம்பிக்கையுடன் காப்பாற்ற போராடும் கணவன். இது ஒரு பக்கம் என்றால், குற்ற செயல் நடந்த கதை வெவ்வேறு திருப்பங்களுடன் பயணிக்கிறது.அது ஒரு மர்மமான மர்டர் மிஸ்டரி திரில்லர் அனுபவமாக இருக்கும் " என்கிறார்.

விரைவில் படத்தின் பாடல்கள் வெளியாகவுள்ளன. இந்தக் கதை முழுக்க முழுக்க அமெரிக்காவில் நடக்கிறது. முழுப் படப்பிடிப்பும் அமெரிக்காவிலேயே நடத்தப்பட்டுள்ளது. ஏதோ வெறும் பின்புலத்திற்காக அமெரிக்க நாட்டைக் காட்டாமல் அங்குள்ள வாழ்க்கை முறை, காவல்துறை, புலனாய்வு நடவடிக்கைகள், நீதிமன்றம் போன்ற அனைத்தும் நம்பகத்தன்மையுடன் படத்தில் காட்டப்பட்டுள்ளன.அந்த பரபரப்பான உலகம் பார்வையாளர்களை வசீகரித்துப் புதிய திரை அனுபவத்தைக் கொடுக்கும்படியாக இருக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்