< Back
சினிமா செய்திகள்
Vanangaan release date announced on Arun Vijays birthday
சினிமா செய்திகள்

அருண் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு 'வணங்கான்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தினத்தந்தி
|
19 Nov 2024 11:11 AM IST

சிறப்பு போஸ்டர் வெளியிட்டு 'வணங்கான்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

இயக்குனர் பாலா, அருண் விஜய் நடிப்பில் 'வணங்கான்' எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். இதில் அருண் விஜய்யுடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, ஜி.வி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் இருந்தது.

இன்று நடிகர் அருண் விஜய் தனது 46-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்தநிலையில், 'வணங்கான்' படக்குழு அருண் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளதோடு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு 'வணங்கான்' படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளது. அதன்படி, 'வணங்கான்' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

மேலும் செய்திகள்