< Back
சினிமா செய்திகள்

சினிமா செய்திகள்
'கேங்கர்ஸ்' படத்தில் வடிவேலுக்கு இத்தனை கெட்டப்பா?

15 Feb 2025 3:51 PM IST
15 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடிக்கிறார்.
சென்னை,
சுந்தர்.சி இயக்கத்தில் காமெடியனாக நடிகர் வடிவேலு நடித்த படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றிருக்கின்றன. அதன்படி, சுந்தர்.சி, வடிவேலு இதுவரை மூன்று படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
இதற்கிடையில் 15 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் புதிய படத்திற்கு 'கேங்கர்ஸ்' எனப்பெயரிடப்பட்டுள்ளது. இதில் வடிவேலு, சுந்தர். சி-யுடன் இணைந்து கேத்ரின் தெரசா, வாணி போஜன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இந்த நிலையில், இதில் நடிகர் வடிவேலு 5 கெட்டப்பில் நடித்துள்ளதாகவும், அதில் ஒன்று லேடி கெட்டப் என்றும் கூறப்படுகிறது. வடிவேலு ஏற்கனவே "பாட்டாளி, நகரம், தலைநகரம்" ஆகிய படங்களில் லேடி கெட்டப்பில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.