< Back
ஓ.டி.டி.
ஓடிடி தளத்தில் வெளியான சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி
ஓ.டி.டி.

ஓடிடி தளத்தில் வெளியான சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி

தினத்தந்தி
|
12 March 2024 5:10 PM IST

நடிகர் சந்தானம் நடித்துள்ள வடக்குப்பட்டி ராமசாமி படமானது ஓடிடியில் வெளியாகியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சென்னை,

'டிக்கிலோனா' படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவான திரைப்படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. இந்த படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்த இப்படம் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி தியேட்டர்களில் வெளியானது.

இந்நிலையில் வடக்குப்பட்டி ராமசாமி படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. அதுவும் ஒரே நேரத்தில் அமேசான் பிரைம் மற்றும் ஆஹா ஓ.டி.டி தளங்களில் இப்படம் வெளியாகியுள்ளது.



மேலும் செய்திகள்