என்னுடைய கவர்ச்சியை பயன்படுத்தி... வெளிப்படையாக பேசி ரசிகர்களை அதிர வைத்த நடிகை
|நடிகர் அமீர் கானின் படத்தில் நடிக்க முடிவு செய்ததற்கு ஒரே காரணம், அப்போது எனக்கு பணம் தேவையாக இருந்தது என்று நடிகை பூஜா பேடி கூறியுள்ளார்.
ஐதராபாத்,
பாலிவுட் படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர் நடிகை பூஜா பேடி. சமீபத்தில் ஐதராபாத் நகரில், இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறைக்கான கூட்டமைப்பு (பிக்கி) சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அவர் கூடியிருந்த ரசிகர்களிடையே, வெளிப்படையாக சில விசயங்களை பேசி அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இந்த கூட்டத்தில் அவர், நடிக்க வந்தது பற்றிய சில விவரங்களை பகிர்ந்து கொண்டார். விஷ்கன்யா என்ற படத்தில் நடித்து பூஜா பாலிவுட் திரையுலகில் அறிமுகம் ஆனார். எனினும், ஜோ ஜீதா வோஹி சிக்கந்தர் படத்தில் நடித்ததே ரசிகர்களிடையே அவருக்கான அங்கீகாரம் கிடைக்க வழியேற்படுத்தி தந்தது.
தொடக்க காலத்தில் அவருடைய நடிப்பை பற்றி அவரே கூறும்போது, நான் ஒரு பயங்கர நடிகை என அவர் கூறி கொள்கிறார். தொடர்ந்து அவர் பேசும்போது, என்னுடைய நடிப்பு சரிவர இல்லாதபோது, அது தெரியாமல் இருப்பதற்காக, ரசிகர்களின் கவனம் திசை திரும்ப வேண்டும் என்பதற்காக என்னுடைய கவர்ச்சியான பாகங்களை அவ்வப்போது பயன்படுத்தி கொள்வேன் என கூறினார்.
படங்களில் நடிக்க வேண்டும் என ஒருபோதும் விரும்பியதே இல்லை என பூஜா கூறுகிறார். நடிகர் அமீர் கானின் ஜோ ஜீதா வோஹி சிக்கந்தர் படத்தில் நடிக்க வேண்டும் என முடிவு செய்ததற்கு ஒரே காரணம், அப்போது எனக்கு பணம் தேவையாக இருந்தது என்றும் வெளிப்படையாக கூறியுள்ளார்.
1990-ம் காலகட்டத்தில் கவர்ச்சி நடிகையாக பரவலாக அறியப்பட்டவர் பூஜா பேடி. இதுபற்றி அவர் கூறும்போது, முதலில், கவர்ச்சி நடிகை என முத்திரை குத்தப்பட்டபோது சற்று அசவுகரியம் ஏற்பட்டது. ஆனால், செக்சியான நடிகை என என்னை அழைக்க தொடங்கினால், அதற்கு சரியான நபராக இருக்க வேண்டும் மற்றும் அதில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என நினைத்தேன் என்கிறார்.
நடிகர் கபீர் பேடியின் மகளான இவருடைய மகள் ஆலயா, இளம் நடிகையாக பாலிவுட்டில் நடித்து வருகிறார். சமீபத்தில் பெரும் பொருட்செலவில் உருவான படே மியான் சோட்டே மியான் என்ற படத்தில் நடிகர் அக்சய் குமார், டைகர் ஷெராப் மற்றும் மனுஷி சில்லார் உள்ளிட்டோருடன் சேர்ந்து ஆலயா நடித்துள்ளார்.