< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
விக்ராந்த் மற்றும் யோகி பாபு இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்
|6 Sept 2024 9:19 PM IST
விக்ராந்த் மற்றும் யோகி பாபு இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை வெளியாகவுள்ளது.
சென்னை,
'தா', 'வில் அம்பு' போன்ற படங்களை இயக்கிய ரமேஷ் சுப்ரமணியம், பிக் பேங் சினிமாஸ் மூலம் தயாரித்து இயக்கும் படத்தில் விக்ராந்த் -யோகிபாபு இணைந்து நடிக்கின்றனர். பவித்ரா மாரிமுத்து கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் இனிகோ பிரபாகர், மிப்புசாமி, குமார் நடராஜன் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். பால முரளி பாலு இசையமைக்கிறார்.
ரஜினிகாந்துடன் இணைந்து விக்ராந்த் லால் சலாம் திரைப்படத்தில் நடித்துள்ளார். படம் பற்றி பேசிய இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் 'இந்த படம் 1950 களில் நடக்கும் ஒரு சைக்கலாஜிக்கல் கதைக்களம்'எனக் கூறியுள்ளார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.