< Back
சினிமா செய்திகள்
Update on Vadivelu and Fahadh Faasil’s Maareesan
சினிமா செய்திகள்

'மாமன்னன்' படத்துக்குப் பிறகு வடிவேலு, பகத் பாசில் நடிக்கும் 'மாரீசன்' படத்தின் அப்டேட்

தினத்தந்தி
|
25 Oct 2024 9:15 AM IST

'மாமன்னன்' படத்துக்குப் பிறகு நடிகர் வடிவேலுவும், பகத் பாசிலும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளனர்.

சென்னை,

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த ஆண்டு ஜூன் 29-ந்தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'மாமன்னன்'. இந்த படத்தில் நடிகர் வடிவேலு 'மாமன்னன்' கதாபாத்திரத்திலும் பகத் பாசில் 'ரத்தினவேல்' கதாபாத்திரத்திலும் நடித்து இருந்தனர். அதில் மாமன்னன் கதாபாத்திரத்தை விட பகத் பாசிலின் ரத்தினவேல் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அந்த கதாபாத்திரத்தை பாராட்டி பதிவிட்டனர்.

'மாமன்னன்' படத்துக்குப் பிறகு நடிகர் வடிவேலுவும், பகத் பாசிலும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளனர். பிரபல மலையாள இயக்குனர் ஆர்.கிருஷ்னமூர்த்தி இயக்கும் இந்த படத்திற்கு 'மாரீசன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. யுவன்சங்கர்ராஜா இசையமைக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

அதன்படி, மாரீசன் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நேற்று சென்னையில் துவங்கியுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டின் மத்தியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 'மாமன்னன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு வடிவேலுவுடன் இணைந்து பகத் பாசில் நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்