அர்ஜுன் தாஸ் நடித்துள்ள "ஒன்ஸ் மோர்" படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட்
|அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் நடித்துள்ள 'ஒன்ஸ் மோர்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாகிறது.
சென்னை,
தமிழில் 'மாஸ்டர், கைதி, விக்ரம்' உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அர்ஜுன் தாஸ். இவர் 'அநீதி, ரசவாதி, போர்' போன்ற பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். தற்போது அர்ஜுன் தாஸ் நடிப்பில் புதிய திரைப்படம் ஒன்று உருவாகி இருக்கிறது.
இந்த படத்தில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி சங்கர் நடித்துள்ளார். 'குட் நைட் ' மற்றும் 'லவ்வர்' திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியுள்ள இந்த படத்திற்கு 'ஒன்ஸ் மோர்' என்று பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி வைரலானது.
இந்தநிலையில் தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கள் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் முதல் பாடலான 'மிஸ் ஒருத்தி' என்ற பாடல் நாளை மாலை 5 மணியளவில் வெளியாக உள்ளது.