< Back
சினிமா செய்திகள்
நாளை வெளியாகும் புதிய படத்தின் அப்டேட் - சிம்பு
சினிமா செய்திகள்

நாளை வெளியாகும் புதிய படத்தின் அப்டேட் - சிம்பு

தினத்தந்தி
|
20 Oct 2024 6:13 PM IST

நடிகர் சிம்பு நடிக்க உள்ள புதிய படத்தின் அப்டேட் நாளை மாலை வெளியாக உள்ளது.

சென்னை,

நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் 48-வது படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தினை தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், இன்னும் படப்பிடிப்பு துவங்கவில்லை. இதற்கிடையே, இயக்குனர் மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் 'தக் லைப்' படத்தில் சிம்பு இணைந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் முடிவடைந்தது.

இந்த நிலையில், தற்போது சிம்பு எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தம் + மன்மதன் + வல்லவன் + விண்ணைத்தாண்டி வருவாயா இணைந்த ஜென் இசட் கதைதான் நம்ம அடுத்த திரைப்படம்" எனத் தெரிவித்துள்ளார். இதனால், இன்றைய கால இளைஞர்களின் காதலைப் பேசும் படத்தில் சிம்பு நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் தனது அடுத்த படத்தின் அப்டேட் ஒன்றை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார். அதில் '2கே கிட்ஸ் அனைவரும் காத்திருங்கள் நாளை மாலை 06.06 மணிக்கு வருகிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்