< Back
சினிமா செய்திகள்
இன்க்ரெடிபிள்ஸ் 3 படம் குறித்த அப்டேட்
சினிமா செய்திகள்

'இன்க்ரெடிபிள்ஸ் 3' படம் குறித்த அப்டேட்

தினத்தந்தி
|
11 Aug 2024 12:37 PM IST

வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் நிறுவனம் 'இன்க்ரெடிபிள்ஸ் 3' படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

கலிபோர்னியா,

'தி இன்க்ரெடிபிள்ஸ்' என்பது பிக்சர் அனிமேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்து வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் வெளியிட்ட 2004-ம் ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமாகும். இந்த படத்தை பிராட் பேர்ட் எழுதி இயக்கியுள்ளார். இதனை தொடர்ந்து 14 ஆண்டு இடைவெளிக்கு பிறகு 'இன்க்ரெடிபிள்ஸ் 2' படம் வெளியானது. இந்த இரண்டு படங்களும் உலகளவில் அதிக வசூல் சாதனையை செய்துள்ளன. மேலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்தநிலையில், சமீபத்தில் நடைபெற்ற டிஸ்னியின் டி23 நிகழ்ச்சியின் போது பிக்சர் தலைவர் பீட் டாக்டர் இந்த படத்தின் மூன்றாம் பாகமான 'இன்க்ரெடிபிள்ஸ் 3' படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டார். அதாவது, 'இன்சைட் அவுட் 2' படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சூப்பர் ஹீரோ குடும்பம் மீண்டும் பெரிய திரைகளில் வரப்போவதாக அறிவித்துள்ளார். பிக்சர் அனிமேஷன் ஸ்டுடியோவில் 'இன்க்ரெடிபிள்ஸ் 3' படத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த 'இன்க்ரெடிபிள்ஸ் 3' படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 2027-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்