< Back
சினிமா செய்திகள்
யோகி பாபுவின் ஜோரா கைய தட்டுங்க படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
சினிமா செய்திகள்

யோகி பாபுவின் 'ஜோரா கைய தட்டுங்க' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

தினத்தந்தி
|
26 May 2024 5:55 PM IST

யோகிபாபு நடிக்கும் 'ஜோரா கைய தட்டுங்க' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டார்.

தமிழ் சினிமாவில் இடம்பெறும் நகைசுவை கதாபாத்திரங்களில் தனக்கென தனி பாணியை உருவாக்கியவர் நகைச்சுவை நடிகர் யோகிபாபு. பிரபல தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற லொள்ளு சபா நிகழ்ச்சியில் அறிமுகமாகி அதன் பின்னர் சின்ன சின்ன காமெடி காட்சிகளில் நடித்து வந்த யோகி பாபு தற்போது பல முன்னணி நட்சத்திரங்களால் பாராட்டைப் பெற்ற நடிகராக திகழ்கிறார்.

தற்பொழுது உள்ள தமிழ் சினிமாவில் எந்த திரைப்படத்திற்கு சென்றாலும் யோகி பாபுவை காணலாம். அத்தனை திரைப்படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.

யோகி பாபு நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா, மண்டேலா உள்ளிட்ட திரைப்படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் அவரை கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுத் தந்தது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மாவீரன், ஜெயிலர் போன்ற படங்களில் சிறப்பான நகைச்சுவையை வெளிப்படுத்தி நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த வருடம் அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த ஜவான் படத்திலும் அறிமுகமாகி தனது இருப்பை பாலிவுட்டிலும் உறுதி செய்தார் யோகி பாபு.

இந்த நிலையில் தற்போது வாமா என்டர்டெயின்மென்ட் சார்பில் ஜாகிர் அலி தயாரிப்பில் விநீஷ் மில்லினியம் இயக்கத்தில் 'ஜோரா கைய தட்டுங்க' என்ற படத்தில் நடித்துள்ளார். படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளனர். இதனை நடிகர் விஜய் சேதுபதி தற்பொழுது அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இப்போஸ்டரில் யோகிபாபு மேஜிக் செய்யும் வித்தகன் வேடத்தில் ஒரு சோபாவில் அமர்ந்து இருக்கிறார். படத்தின் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வருகிறது

மேலும் செய்திகள்