< Back
சினிமா செய்திகள்
U/A certificate for Mohanlals L2Emburaan
சினிமா செய்திகள்

மோகன்லாலின் 'எல் 2 எம்புரான்' படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

தினத்தந்தி
|
7 March 2025 10:33 AM IST

'எல் 2 எம்புரான்' படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'லூசிபர்'. இந்த படத்தின் மூலம் பிருத்விராஜ் இயக்குனராக அறிமுகமானார். தற்போது, இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகி இருக்கிறது. இந்த படத்திற்கு 'எல் 2 எம்புரான்' என பெயரிடப்பட்டுள்ளது. இதில், மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

சமீபத்தில் இப்படத்தில் நடித்துள்ள முக்கியமான 36 கதாபாத்திரங்களின் அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அதில் டோவினோ தாமஸ் 'ஜதின் ராமதாஸ்' என்ற கதாபாத்திரத்திலும், பிருத்விராஜ் 'சையத் மசூத்' என்ற கதாபாத்திரத்திலும், மோகன்லால் 'குரேஷி ஆபிராம் ஏ.கே. ஸ்டீபன் நெடும்பள்ளி' என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் பான் இந்திய அளவில் வருகிற 27-ந் தேதி வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்