இரண்டு நிபந்தனைகள்...தனுஷ் மீதான ரெட் கார்டு நீக்கம்?
|தனுஷுக்கு விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டு நீக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
நடிகர் தனுஷ், ஏற்கனவே 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் படப்பிடிப்புக்கு வராமல் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாகவும் பிரபல தயாரிப்பு நிறுவனங்களிடம் அட்வான்ஸ் தொகை பெற்று அவர்களின் படங்களில் நடிக்காமல் இழுத்தடித்ததாகவும், அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுக்காமல் இருந்ததாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நடிகர் தனுஷுக்கு ரெட் கார்டு விதித்தது. இந்நிலையில், தனுஷுக்கு விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டு நீக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 'மெர்சல்' தயாரிப்பாளர்களுடன் தனது திட்டத்தை விரைவில் தொடங்குவது, 'பொல்லாதவன்' தயாரிப்பாளர்களிடம் இருந்து பெற்ற அட்வான்ஸ் தொகையை வட்டியுடன் திருப்பித் தருவது என இரு நிபந்தனைகளுக்கு தனுஷ் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த இரு நிபந்தனைகளை தொடர்ந்து தனுஷ் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது..