மீண்டும் பிரபாஸுடன் இணைந்து நடிக்கும் திரிஷா
|நடிகை திரிஷா தற்போது அஜித்துடன் இணைந்து 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்து வருகிறார்.
சென்னை,
தமிழ் திரை உலகில் 21 ஆண்டுகளாக தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை கொண்டவர் திரிஷா. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் திரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இவர் தற்போது அஜித்துடன் விடாமுயற்சி, குட் பேட் அக்லி மற்றும் கமலின் தக் லைப் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவியுடன் 'விஸ்வம்பரா' படத்திலும், மலையாளத்தில் இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார். இப்படி அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் நடிகை திரிஷா அடுத்ததாக பிரபாஸுடன் இணைந்து நடிக்க உள்ளார்.
இந்த படத்தை சந்தீப் ரெட்டி இயக்க உள்ளார். தற்போது பிரபாஸ் 'ராஜா ஷாப்' என்ற படத்தில் நடித்துக் கொண்டு உள்ளார். இப்படம் நிறைவடைந்த உடன் புதிய படம் தொடங்க உள்ளது. திரிஷா ஏற்கனவே, பிரபாஸுடன் இணைந்து பவுர்ணமி, புஜ்ஜி காடு போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.