'தக் லைப்' படத்தின் அப்டேட்டை பகிர்ந்த நடிகை திரிஷா
|‘தக் லைப்’ படத்தின் பாடல் படப்பிடிப்பு மும்பையில் நடைப்பெற்று வருகிறது.
மும்பை,
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவராவார் திரிஷா. இவர் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. சில மாதங்களுக்கு முன் விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்தில் மட்ட என்ற பாடலில் சிறப்பு நடனம் ஆடினார்.
தற்பொழுது அஜித் நடித்துள்ள விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மணி ரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தக் லைப். இப்படத்தில் சிம்பு மற்றும் திரிஷா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் டப்பிங் பணிகள் சில வரங்களுக்கு முன் நடைப்பெற்றது.
சிம்புவும் திரிஷாவும் கடைசியாக விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஜோடியாக நடித்தனர். இதையடுத்து, இப்போது பல ஆண்டுகள் கழித்து தக் லைப் படத்தில் ஜோடி சேர்ந்திருக்கின்றனர். சிலம்பரசன், திரிஷா இணைந்து நடனமாடும் ஒரு ரொமாண்டிக் பாடல், தக் லைப் படத்தில் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
தற்பொழுது படத்தின் பாடல் படப்பிடிப்பு மும்பையில் நடைப்பெற்று வருகிறது. இப்பாடலில் திரிஷா நடனமாடியுள்ளார். இப்பாடல் மணிரத்னம் திரைப்படமான பம்பாய் திரைப்படத்தில் இடம்பெற்ற கண்ணாலனே பாடலைப்போல் ஒரு சூபி கதக் நடனம் போல் அமைந்துள்ளது.
படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை திரிஷா அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு என்னுடைய பிடித்தமான பாடல் என பதிவிட்டுள்ளார்.