
பிரபல பாலிவுட் நடிகையின் பயோபிக்கில் திரிப்தி டிம்ரி?

நடிகை பர்வீன் பாபியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் திரிப்தி டிம்ரி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மும்பை,
அமர் அக்பர் அந்தோணி, சுஹாக், காலா பத்தர், ஷான், கிராந்தி, காளியா மற்றும் நமக் ஹலால் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் நன்கு அறியப்பட்டவர் பர்வீன் பாபி. சுமார் 13 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்த இவர் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தார். அவற்றில் 10 படங்கள் பிளாக்பஸ்டர் ஆகின.
கடந்த 2005-ம் ஆண்டு இவர் காலமானார். இந்நிலையில் இவரது வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட உள்ளது. இதனை ஷோனாலி போஸ் இயக்குகிறார். இந்த சூழலில், பயோபிக்கில் பர்வீன் பாபியாக நடிக்க அனிமல் பட நடிகை திரிப்தி டிம்ரி இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.
விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பை துவங்க இருப்பதாகவும் தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.