< Back
சினிமா செய்திகள்
ஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த் படத்தின் டிரெய்லர் அப்டேட்
சினிமா செய்திகள்

'ஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த்' படத்தின் டிரெய்லர் அப்டேட்

தினத்தந்தி
|
4 Feb 2025 5:54 PM IST

கரேத் எட்வர்ட்ஸ் இயக்கும் 'ஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த்' படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக உள்ளது.

சென்னை,

பிரபல ஹாலிவுட் இயக்குனரும், எழுத்தாளருமானவர் டேவிட் கோப். இவர் கடந்த 1993-ம் ஆண்டு வெளியாகி உலகளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற "ஜுராசிக் பார்க்" மற்றும் அதன் தொடர்ச்சியாக 1997-ம் ஆண்டு வெளியான "ஜுராசிக் பார்க்: தி லாஸ்ட் வேர்ல்ட்" ஆகிய படங்களில் எழுத்தாளராக பணிபுரிந்திருக்கிறார்.

தற்போது இவர் 'ஜுராசிக் வேர்ல்ட்' 4-வது பாகத்திற்கான கதை எழுதியுள்ளார். இப்படத்தை காட்ஜில்லா, ராக் ஆன், தி கிரியேட்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய கரேத் எட்வர்ட்ஸ் இயக்குகிறார். யுனிவர்சல் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஜோனதன் பெய்லி, ஸ்கார்லெட் ஜொஹான்ஸ்சன், மானுவல் கார்சியா, மஹெர்ஷாலா அலி, லூனா பிளேஸ், டேவிட் ஐகோனோ ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு 'ஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் வருகிற ஜூலை மாதம் 2-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. அதன்படி இப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்