< Back
சினிமா செய்திகள்
காதலிக்க நேரமில்லை படத்தின் டிரெய்லர் வெளியீடு
சினிமா செய்திகள்

'காதலிக்க நேரமில்லை' படத்தின் டிரெய்லர் வெளியீடு

தினத்தந்தி
|
7 Jan 2025 8:24 PM IST

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள 'காதலிக்க நேரமில்லை' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

சென்னை,

'பிரதர்' படத்தை தொடர்ந்து ஜெயம்ரவி நடிப்பில் வெளியாக உள்ள படம் 'காதலிக்க நேரமில்லை'. இதில், நித்யா மேனன், யோகி பாபு, லால், வினய், லட்சுமி கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். "வணக்கம் சென்னை" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கிருத்திகா உதயநிதி இப்படத்தை இயக்கி உள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகின. அதிலும் 3-வது பாடலான 'பிரேக் அப் டா' பாடல் வைரலாகி வருகிறது.

இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் முழு பாடல்களும் அடங்கிய ஜக் பாக்ஸ் வெளியானது. அதனை தொடர்ந்து தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்