இந்த ஆண்டு வெளியாகி நேர்மறை விமர்சனங்களுடன் பாக்ஸ் ஆபீஸில் வெற்றி பெற்ற டாப் 5 தமிழ் படங்கள்
|இந்த (2024) ஆண்டு, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது
சென்னை,
இந்த (2024) ஆண்டு, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. ஈர்க்கக்கூடிய கதைகள், நட்சத்திரங்களின் நடிப்பு உள்ளிட்ட அம்சங்களுடன் பல படங்கள் இந்த ஆண்டு வெளியாகி இருக்கிறது. இந்த படங்கள் நேர்மறை விமர்சனம் காரணமாக வசூலையும் அள்ளியுள்ளன. அதன்படி, நேர்மறை விமர்சனம் காரணமாக பாக்ஸ் ஆபீஸில் வெற்றி பெற்ற டாப் 5 தமிழ் படங்களை தற்போது காண்போம்.
1. மகாராஜா
நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 50-வது படமாக உருவானது மகாராஜா. இப்படம் ரசிகர்களிடையே நேர்மறையான விமர்சனங்களை பெற்ற் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்தது. இப்படம் விஜய் சேதுபதியின் சினிமாவாழ்வில் முக்கியமான இடத்தை பிடித்தது.
2. லப்பர் பந்து
கனா, எப்.ஐ.ஆர் படங்களில் இணை இயக்குனர் மற்றும் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குனராக அறிமுகமான படம் லப்பர் பந்து. ஹரிஷ் கல்யான், அட்டகத்தி தினேஷ் கதாநாயகர்களாக நடித்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று நேர்மறை விமர்சனங்களுடன் பாக்ஸ் ஆபீஸில் வெற்றி பெற்றது.
3. டிமான்ட்டி காலனி 2
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்த படம் 'டிமான்ட்டி காலனி 2'. பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்து, ஹாரர் திரில்லர் கதை களத்தில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபீஸில் வெற்றி பெற்றது. இதன் முதல் பாகமும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
4. பிளாக்
அறிமுக இயக்குனர் கே.ஜி. பாலசுப்ரமணி இயக்கிய படம் பிளாக். இந்த படத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாகவும், நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடித்தனர். இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த நேர்மறையான விமர்சனம் பாக்ஸ் ஆபீஸில் வெற்றி பெற உதவியது.
5. அமரன்
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி உருவான படம் அமரன். இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்திருந்தனர். இப்படம் தொடர்ந்து நேர்மறை விமர்சனங்களை பெற்று இதுவரை சுமார் ரூ.300 கோடி வசூல் செய்துள்ளது.