தமிழ்நாட்டில் முதல் நாளில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்
|ரஜினிகாந்த், விஜய், அஜித் போன்ற முக்கிய நட்சத்திரங்களின் படங்கள் இதில் உள்ளன.
சென்னை,
தமிழ்நாட்டில் வெளியாகும் பெரும்பாலான திரைப்படங்கள் முதல் நாளில் அதிக வசூல் செய்கின்றன. இதில் குறிப்பாக, ரஜினிகாந்த், விஜய், அஜித் போன்ற முக்கிய நட்சத்திரங்களின் படங்கள் உள்ளன. சமீபத்தில் வெளியான விஜய்யின் தி கோட் திரைப்படம் முதல் நாளில் அதிக பாக்ஸ் ஆபிஸ் வசூலை பெற்றுள்ள நிலையில், தற்போது வரை வெளியான தமிழ் படங்களில் தமிழ்நாட்டில் முதல் நாளில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்களை காணலாம்.
1. பீஸ்ட்
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான பீஸ்ட் படம் முதல் நாளில் பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்த இப்படம் தமிழ்நாட்டில் முதல்நாளில் ரூ.37 கோடி வசூலித்து தமிழ்நாட்டில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
2. லியோ
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் லியோ. விஜய், திரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல்நாளில் ரூ.35 கோடி வசூலித்துள்ளது.
3. தி கோட்
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய்யின் மிரட்டலான நடிப்பில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டுவரும் படம் 'தி கோட்'. இப்படத்தில் விஜய்யுடன், பிரபு தேவா, பிரசாந்த், மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தி கோட் படம் தமிழ் நாட்டில் முதல்நாளில் ரூ.31 கோடி வசூலித்தது.
4. சர்கார்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் சர்கார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்த இப்படம் தமிழ் நாட்டில் முதல்நாளில் ரூ.30 கோடி வசூலித்தது.
5. வலிமை
அஜித் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம் வலிமை. எச்.வினோத் இயக்கத்தில் உருவான இப்படம் தமிழ் நாட்டில் மட்டும் முதல்நாளில் ரூ.28 கோடி வசூலித்தது.