< Back
சினிமா செய்திகள்
Top 5 Most Powerful Naruto Characters
சினிமா செய்திகள்

டாப் 5 சக்தி வாய்ந்த நருடோ கதாபாத்திரங்கள்

தினத்தந்தி
|
23 July 2024 9:06 PM IST

நருடோ தொடர் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களால் மிகவும் பிரபலமாக உள்ளது.

சென்னை,

சமீப காலமாக அனிமெ தொடர்களுக்கு சிறுவர்கள், இளைஞர்கள் இடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதன்படி, இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் ஜப்பானின் புகழ்பெற்ற மசாஷி கிஷிமோட்டோ எழுதி மாங்கா காமிக்ஸாக வெளியான அனிமெ தொடரான நருடோ தொடர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

நருடோவின் கதை ஹிடன் லீப் கிராமத்தில் வளர்ந்த ஒரு சிறுவனான நருடோ உசுமாகியைப் பற்றியது. அவன் தனது கிராமத்திலிருந்து ஒரு ஹீரோவாக மாறும் பயணத்தை இந்த கதை விவரிக்கிறது. இது உலகெங்கிலும் உள்ள ரசிகர்களால் மிகவும் பிரபலமாக உள்ளது.

தற்போது இந்த தொடரில் வரும் டாப் 5 சக்தி வாய்ந்த கதாபாத்திரங்களை பார்க்கலாம்.

5. ஹாஷிரமா செஞ்சு(Hashirama Senju)

ஹாஷிரமா செஞ்சு ஹிடன் லீப் கிராமத்தின் முதல் ஹோகாஹெ ஆவார். அவர் தனது மகத்தான சக்தி மற்றும் திறமைக்காக ஷினோபியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். அவர் தைஜுட்சு, நிஞ்ஜுட்சு மற்றும் கென்ஜுட்சு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்.

4. சசுகே உச்சிஹா(Sasuke Uchiha)

சசுகே உச்சிஹா நருடோவின் சிறந்த நண்பர் ஆவார். இவர் இட்டாச்சி உச்சிஹாவின் இளைய சகோதரர் மற்றும் உச்சிஹா கிளானில் எஞ்சியிருக்கும் கடைசி உறுப்பினர் ஆவார். இவர் தைஜுட்சு மற்றும் நிஞ்ஜுட்சு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்.

3. மதரா உச்சிஹா(Madara Uchiha)

நருடோ தொடரின் மிகவும் சக்திவாய்ந்த கதாபாத்திரங்களில் ஒன்றாக மதரா உச்சிஹா கருதப்படுகிறார். இவர் உச்சிஹா கிளானின் தலைவராக இருந்தார்.

2. நருடோ உசுமாகி(Naruto Uzumaki)

நருடோ உசுமாகி நருடோ தொடரின் முக்கிய ஹீரோ. நருடோ வலுவான உறுதியான ஒரு சக்திவாய்ந்த நிஞ்ஜா. மேலும் இவர் ஒன்பது வால் நரியின் சக்கரத்தையும் பயன்படுத்தலாம்.

1.காகுயா ஒட்சுட்சுகி(Kaguya Ōtsutsuki)

இவர் கடவுள் போன்ற சக்திகளைக் கொண்டுள்ளவர். மேம்பட்ட சக்ரா நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான அவரது திறன் அவரை நருடோ பிரபஞ்சத்தின் மிகவும் சக்திவாய்ந்த கதாபாத்திரங்களில் ஒன்றாக ஆக்குகிறது.

மேலும் செய்திகள்