< Back
சினிமா செய்திகள்
Tom Holland to star in Oppenheimer directors 13th film
சினிமா செய்திகள்

கிறிஸ்டோபர் நோலனின் 13-வது படத்தில் டாம் ஹாலண்ட்

தினத்தந்தி
|
22 Oct 2024 11:18 AM IST

'ஓப்பன் ஹெய்மர்' பட இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் படத்தில் டாம் ஹாலண்ட் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாஷிங்டன்,

பிரபல ஹாலிவுட் இயக்குனர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன்.இவர் இயக்கிய படங்களில், அனைவருக்கும் பிடித்தமான படங்களில் முக்கியமானது மெமென்டோ. 2000-ம் ஆண்டில் வெளியான இந்தப் படத்தில், கிறிஸ்டோபர் நோலன் வித்தியாசமான முறையில் தன்னுடைய திரைக்கதையை அணுகியிருந்தார்.

இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'ஓப்பன் ஹெய்மர்'. அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானியான ஜே.ராபர்ட் ஓப்பன் ஹெய்மர் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. ஓப்பன் ஹெய்மர் கதாபாத்திரத்தில் சிலியன் மர்பி நடித்த இப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை அள்ளியது.

இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் அடுத்ததாக தனது 13-வது படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில், மேட் டாமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் முன்னதாக நோலன் இயக்கத்தில் 2014-ல் வெளியான 'இன்டர்ஸ்டெல்லர்' மற்றும் 'ஓபன் ஹெய்மர்' படங்களில் நடித்தவர்.

யுனிவர்சல் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து நோலன் மனைவி எம்மா தாமஸ் இப்படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் 'ஸ்பைடர் மேன்' பட நடிகர் டாம் ஹாலண்ட் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் டாம் ஹாலண்ட் நடிக்கும் முதல் படமாக இது அமையும்.

மேலும் செய்திகள்