அனிமல் திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் நிறைவு
|அனிமல் திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது.
சென்னை.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. தமிழில் 'சுல்தான்', 'வாரிசு' படங்களில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். ரன்பீர் கபூருடன் நடித்த 'அனிமல்' இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் மோசமான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் ரூ.900 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இந்நிலையில் அனிமல் திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது.அதனை கொண்டாடும் விதமாக நடிகைகள் ராஷ்மிகா மந்தனா மற்றும் திரிப்தி டிம்ரி ஆகியோர் தங்களது பிளாக்பஸ்டர் படமான 'அனிமல்' படத்தின் முதல் ஆண்டு விழாவை இன்றுகொண்டாடி உள்ளனர்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில், ராஷ்மிகா அனிமல் படத்தின் வீடியோ காட்சிகளை பகிர்ந்துகொண்டுள்ளார். அதில், "டிசம்பர் மாதம் உண்மையில் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது, மிகவும் நல்ல தருணமாக இருந்தது. சுவாமி சுவாமி சுவாமி. நன்றி நன்றி நன்றி" என பதிவிட்டுள்ளார்.
மேலும் திரிப்தி டிம்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் , அனிமல் படத்தொகுப்பில் இருந்து பி.டி.எஸ் படங்களைப் பகிர்ந்துள்ளார். 11 விலங்குக்கு நேற்று #1 வருடம் போல் நே தெரிகிறது., என பதிவிட்டுள்ளார். https://www.instagram.com/p/DDCPoWfJagY/?hl=en& img_index=5