12 ஆண்டுகளை நிறைவு செய்த 'துப்பாக்கி' திரைப்படம்
|ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'துப்பாக்கி' திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.
சென்னை,
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் 'துப்பாக்கி'. விஜய்யின் கெரியரில் முக்கியமான படமாகவும் துப்பாக்கி அமைந்தது. முதன்முறையாக விஜய் நடித்த படம் ரூ.100 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்த படமாகும்.
இந்த படத்தில் காஜல் அகர்வால், சத்யன், வித்யுத் ஜம்வால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 2012-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த படம் வெளியானது. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ராணுவ வீரர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தாலும் தனது நாட்டை காக்கும் கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பார் என்பதையே இந்த படம் உணர்த்துகிறது.
சுமார் ரூ.60 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம், மொத்தமாக ரூ. 129 கோடி வரை வசூல் சாதனை படைத்து மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். இந்த நிலையில் இப்படம் வெளியாகி இன்று 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.