< Back
சினிமா செய்திகள்
நாளை வெளியாகும் தக் லைப் படத்தின் ரிலீஸ் அப்டேட்
சினிமா செய்திகள்

நாளை வெளியாகும் 'தக் லைப்' படத்தின் ரிலீஸ் அப்டேட்

தினத்தந்தி
|
6 Nov 2024 9:39 PM IST

நாளை கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு 'தக் லைப்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த டீசர் வெளியாக உள்ளது.

சென்னை,

36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இப்படத்தில் திரிஷா, சிம்பு, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதனை படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்திருந்தது. இதனையடுத்து இப்படம் எப்போது திரைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்தநிலையில், படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தக் லைப் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு நாளை (நவ. 7) காலை 11 மணிக்கு படத்தின் வெளியீட்டுத் தேதிக்கான டீசரை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மேலும் செய்திகள்