< Back
சினிமா செய்திகள்
மூன்று படங்கள்... ஒரே பெயர்... மூன்றும் சூப்பர் ஹிட் தான்!
சினிமா செய்திகள்

மூன்று படங்கள்... ஒரே பெயர்... மூன்றும் சூப்பர் ஹிட் தான்!

தினத்தந்தி
|
31 Aug 2024 12:27 PM IST

ஒரே பெயரில் வெளியான மூன்று படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன.

சென்னை,

ஒரு படத்திற்கு தலைப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அந்த படத்திற்கான தலைப்பை வைத்து தான் ரசிகர்கள் அப்படம் எப்படிப்பட்ட படம் என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடியும். தற்போதைய காலகட்டத்தில் ஒரே பெயரில் பல படங்கள் வருவது இயல்பாகிவிட்டது. பழைய படங்களின் தலைப்பை இப்போது வரும் படங்களுக்கு தலைப்பாக வைக்கும் பழக்கமும் அதிகமாகி வருகிறது.

அந்த வகையில் ஒரே பெயரில் வெளியான மூன்று படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன. அந்த மூன்று திரைப்படங்களும் 'ஜெயிலர்' என்ற பெயரில் எடுக்கப்பட்டவை. 1938-ம் ஆண்டு சோராப் மோடி இயக்கத்தில் 'ஜெயிலர்' திரைப்படம் முதன்முதலில் வெளியானது. இந்த படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை அடுத்து, 1958-ம் ஆண்டு 'ஜெயிலர்' திரைப்படம் அதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தையும் சோராப் மோடி இயக்கியும், தயாரித்தும் உள்ளார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வசூலில் சாதனையையும் படைத்தது.

அதனை தொடர்ந்து 2023-ம் ஆண்டு இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 'ஜெயிலர்' திரைப்படம் வெளியானது. இந்த படமும் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்