'இதனால்தான் என் அப்பா நடித்த படங்களை பார்ப்பதில்லை' - நடிகை அனன்யா பாண்டே
|நடிகை அனன்யா பாண்டே, தனது அப்பாவும் பாலிவுட் நடிகருமான சங்கி பாண்டே நடித்த பல படங்களை பார்த்ததில்லை என்று கூறியுள்ளார்.
சென்னை,
பிரபல பாலிவுட் நடிகர் சங்கி பாண்டே. சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் இருக்கும் இவர் 100 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இவரது மகள் நடிகை அன்னயா பாண்டே. தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனன்யா பாண்டே, தனது அப்பா நடித்த படங்களை அரிதாகதான் பார்ப்பதாக கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
'நான் சின்ன வயதில் என் அப்பா நடித்த ஒரு படத்தை பார்த்தேன். அப்போது அவரும் என்னுடன்தான் இருந்தார். திடீரென்று அந்த படத்தில் அவர் இறந்து விடுகிறார். அவர் என் அருகில் அமர்ந்திருந்தாலும், அது உண்மையில் நடக்கிறது என்று நினைத்து அதிர்ச்சியமடைந்தேன். இதனால், மற்ற படங்களிலும் அவர் இறந்துவிடுவார் என்று நினைத்து என் அப்பாவின் பல படங்களை நான் பார்க்கவில்லை' என்றார்.
அனன்யா பாண்டே தற்போது கரண் ஜோஹர் தயாரிப்பில் 'சந்த் மேரா தில்' படத்தில் நடித்து வருகிறார். விவேக் சோனி இயக்கும் இப்படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.