'இதனால்தான் தமிழ் படங்களில் நடிக்கவில்லை' - 'லப்பர் பந்து' நடிகை ஸ்வாசிகா
|கடந்த 2009-ம் ஆண்டு வெளியான 'வைகை' படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் ஸ்வாசிகா.
சென்னை,
15 வருடங்களுக்கு முன்பு கடந்த 2009-ம் ஆண்டு வெளியான வைகை படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் ஸ்வாசிகா. அதனையடுத்து, 2012-ம் ஆண்டு வெளியான சாட்டை படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு எந்த தமிழ் படத்திலும் நடிக்காத ஸ்வாசிகா, சமீபத்தில் வெளியான 'லப்பர் பந்து' படத்தில் நடித்தார்.
இப்படத்தில் யசோதாவாக நடித்து ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றார். இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய ஸ்வாசிகா,
'10 வருடங்களாக எனக்கு எந்த தமிழ் பட வாய்ப்புகளும் கிடைக்காததால், சினிமாவுக்கும் எனக்கும் இருந்த தொடர்பு குறைந்தது. சமூக ஊடகங்களின் மூலம்தான் தற்போது லப்பர் பந்துவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. யசோதா கதாபாத்திரத்தில் நான் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் மிகவும் விரும்பினார். அவர் இவ்வளவு நம்பிக்கையை என் மீது வைத்ததால், அந்த வாய்ப்பை இழக்க நான் விரும்பவில்லை' என்றார்
ஸ்வாசிகா விஜய், தற்போது ஸ்ரீராம் வேணு இயக்கும் 'தம்முடு' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். நடிகர் நிதின் நடிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு மகா சிவராத்திரி அன்று திரைக்கு வருகிறது.