
'மதகஜராஜா' பட நிகழ்வில் 'கேம் சேஞ்சர்' குறித்த கேள்வி - அஞ்சலி கொடுத்த பதில்

அஞ்சலி நடித்த மற்றொரு படமான கேம் சேஞ்சரின் வசூல் குறித்து கேட்கப்பட்டது.
சென்னை,
விஷால் மற்றும் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் 'மதகஜராஜா'. சுந்தர் சி இயக்கியுள்ள இப்படத்தில், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி இசையமைத்துள்ள இப்படம் 12 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு கடந்த 12-ந் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது.
ரூ.15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 10 நாட்களில் ரூ.50 கோடி வசூலை கடந்தது. தமிழில் வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது தெலுங்கு மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வருகிற 31-ந் தேதி வெளியாக உள்ளது.
தற்போது படக்குழு இதற்கான புரமோஷன் பணியில் ஈடுபட்டு வருகிறது. அப்போது பட நிகழ்வு ஒன்றில் அஞ்சலி நடித்த மற்றொரு படமான கேம் சேஞ்சரின் வசூல் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில்,
"கேம் சேஞ்சர் நல்ல படம் என்று பலர் என்னிடம் கூறி, எனது நடிப்பைப் பாராட்டினர். இது எனக்கு போதுமானதை விட அதிகம். மற்ற விஷ்யங்களை பற்றி பேச வேண்டும் என்றால், குறைந்தபட்சம் அரை மணி நேரம் அல்லது நாற்பத்தைந்து நிமிடங்கள் ஆகும்' என்றார்.