'இதுதான் கதை: லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் "மிஸ்டர் பாரத்" பட இயக்குனர்
|லோகேஷ் கனகராஜ், 'பென்ஸ்' படத்தை தொடர்ந்து யூடியூபர் பாரத் நடிக்கும் "மிஸ்டர் பாரத்" படத்தை தயாரிக்கிறார்.
சென்னை,
'பைட் கிளப்' படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான லோகேஷ், நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் 'பென்ஸ்' படத்தை தயாரித்து வரும்நிலையில், சமீபத்தில் தனது அடுத்த தயாரிப்பை அறிவித்தார். அதன்படி, "மிஸ்டர் பாரத்" என்ற புதிய படத்தை லோகேஷ் தயாரிக்கிறார். இந்த படத்தில் பிரபல யூடியூபர் பாரத் கதாநாயகனாக நடிக்கிறார்.
இயக்குனர் நிரஞ்சன் இந்த படத்தை இயக்குகிறார். 'கட்சி சேர' புகழ் சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன், நிதி பிரதீப், லிங்கா, ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானநிலையில், இயக்குனர் நிரஞ்சன், பாரத்தின் கதாபாத்திரம் குறித்து பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'ஒரு வருடத்திற்கு முன்பு, நாங்கள் லோகேஷ் அண்ணாவைச் சந்தித்து ஒரு படம் இருப்பதை பற்றி கூறினோம். உடனே அவர் எங்களுடன் இணைந்தார். எந்த பெண்ணிடமும் காதல் சொல்லத்தெரியாத கதாநாயகன் பரத், எப்படி ஒரு பெண்ணை காதலிக்கிறார் என்பதுதான் கதை' என்றார்.