< Back
சினிமா செய்திகள்
This is the reason why Fahadh Faasil played the villain in Pushpa - Allu Arjun
சினிமா செய்திகள்

'இதனால்தான் புஷ்பா படத்தில் பகத் பாசில் வில்லனாக நடித்தார்' - அல்லு அர்ஜுன்

தினத்தந்தி
|
30 Nov 2024 11:37 AM IST

புஷ்பா படத்தில் பகத் பாசில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டதற்கான காரணங்களை அல்லு அர்ஜுன் பகிர்ந்துள்ளார்.

சென்னை,

கடந்த 2021-ம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான படம் 'புஷ்பா தி ரைஸ்'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இப்படம் அடுத்த மாதம் 5-ந் தேதி உலகளவில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. தற்போது, இப்படத்தின் புரமோஷன் பணிக்காக படக்குழுவினர் பல இடங்களுக்கு சென்று வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கேரளாவின் கொச்சியில் , படத்தின் புரமோஷன் பணி நடைபெற்றது.

அப்போது, பேசிய அல்லு அர்ஜுன், புஷ்பா படத்தில் பகத் பாசில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டதற்கான காரணங்களை பகிர்ந்துகொண்டார். இது குறித்து அவர் கூறுகையில்,

'புஷ்பா படத்தின் மீது அவர் வைத்த காதலுக்காகவும், இயக்குனர் சுகுமார் மீது கொண்ட அன்புக்காகவும்தான் வில்லனாக நடிக்க பகத் பாசில் ஒப்புக்கொண்டார். நன்றி, என் அன்பான பகத்பாசில், நன்றி என் சகோதரரே. டிசம்பர் 5-ம் தேதி அவர் என்ன ஒரு அற்புதமான நடிகர் என்பதை நீங்கள் அனைவரும் காண்பீர்கள்'என்றார்.


மேலும் செய்திகள்