பாலிவுட் படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்யும் 'ஜான் விக்' பட தயாரிப்பு நிறுவனம்
|கரண் ஜோஹர் தயாரித்துள்ள 'கில்' படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட உள்ளது.
மும்பை,
பாலிவுட் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோஹர். தற்போது இவர் ஆக்சன் படமான 'கில்' படத்தை தயாரித்துள்ளார். நிகில் நாகேஷ் இயக்கத்தில் உருவான இந்தப்படம் வருகிற 5-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் தன்யா மணிக்தலா, ராகவ் ஜுயல் மற்றும் லக்சயா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் 'கில்' படம் வெளியாவதற்கு முன்னதாக, ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கீனு ரீவ்ஸ் நடித்த 'ஜான் விக்' தொடரை இயக்கிய 87 லெவன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்தப்படத்தை ரீமேக் செய்வதாக கூறப்படுகிறது. சாட் ஸ்டாஹெல்ஸ்கி, தான் சமீபத்தில் பார்த்த சிறந்த அதிரடித் திரைப்படங்களில் 'கில்' படமும் ஒன்று என்று பாராட்டியுள்ளார். இந்த படத்தை தான் ரீமேக் செய்ய உள்ளதாக கூறினார்.
'கில்' படத்தின் தயாரிப்பாளர்கள் 87 லெவன் என்டர்டெயின்மென்ட் எங்கள் படத்தை ஆங்கிலத்தில் ரீமேக் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்." என்று கூறியுள்ளனர்.