'இப்போதைக்கு அதுதான் எனது லட்சியம்'- நடிகை சன்னி லியோன்
|தனது சினிமா அனுபவத்தை நடிகை சன்னி லியோன் பகிர்ந்துள்ளார்.
மும்பை,
படங்களில் பாடல்களுக்கு நடனம் ஆடி பாலிவுட் சினிமாவில் அடியெடுத்து வைத்த சன்னி லியோன், தமிழில் 'வடகறி' படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார். 'ஓ மை கோஸ்ட், தீ இவன்' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தெலுங்கு, இந்தி, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய சன்னி லியோன், தனது சினிமா அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'தங்கள் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறுமா? இல்லையா? என்ற கவலை ஒவ்வொரு நடிகருக்கும் உள்ளது. எல்லோரும் வெற்றிபெற வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். ஆனால், சில நேரங்களில், நாம் விரும்பியபடி விஷயங்கள் நடக்காது.
அதை கட்டுப்படுத்துவது நமது கைகளில் இல்லை. இதனால், அதிலேயா சிக்கிக்கொள்ளாமல், செய்த தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு தொடர்ந்து முன்னேற வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு நாளும் ஏன், ஒவ்வொரு மணிநேரத்திற்கும் கூட நிறைய மாறிக்கொண்டே இருக்கும்.
விரும்புவதைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதே இப்போதைக்கு என்னுடைய லட்சியம். தடைகளை உடைத்த கடின உழைப்பாளியாக என்னை மக்கள் நினைவுகூர விரும்புகிறேன்' என்றார்.