தனுசின் பேச்சை உண்மை என நம்பும் ரசிகர்களுக்கான பதிவு இது - இயக்குனர் விக்னேஷ் சிவன்
|இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் தனுஷ் குறித்து பதிவிட்டுள்ளார்.
சென்னை,
2007ம் ஆண்டு சிவி திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் நடிகராக அறிமுகமானார். விக்னேஷ் சிவன் பிறகு இயக்குனர், பாடலாசிரியர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என்று பன்முக பரிணாமங்களை எடுத்தார். 2012ம் ஆண்டு நடிகர் சிம்புவை வைத்து வெளியான போடா போடி திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். அதற்கு முன்பே தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகர்களை வைத்து ஆல்பம் பாடல்களை எடுத்துள்ளார்.
2015ம் ஆண்டு விஜய் சேதுபதி, நயன்தாராவை வைத்து நானும் ரவுடிதான் படம் இயக்கினார். அந்தப் படத்தின் மூலம் இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா இடையே காதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 2022 அக்டோபர் 9ம் தேதி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதிக்கு உலகு, உயிர் என்ற இரட்டை ஆண் குழந்தை உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
2014ம் ஆண்டு வெளியான தனுஷின் வேலையில்லாப் பட்டதாரி படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். 2018ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவின் நடிப்பில் விக்னேஷ் சிவனின் மூன்றாவது படமான "தானா சேர்ந்த கூட்டம்" வெளியானது.
நடிகை நயன்தாராவின் சிறுவயது வாழ்க்கை முதல் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது வரை உள்ள சம்பவங்களை தொகுத்து ஒரு ஆவணப்படம் தயாராகி உள்ளது. 'நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படம் வருகிற 18-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.இந்த ஆவணப்படத்தில், நடிகர் தனுஷ் தயாரிப்பில் நயன்தாரா நடித்த நானும் ரௌடிதான் படத்தின் காட்சிகள் இடம்பெற அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியான டிரெய்லரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 3 விநாடி வீடியோவிற்கு எதிராய் ரூ.10 கோடி கேட்டு லீகல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் நடிகர் தனுஷ் .நடிகை நயன்தாரா தனுஷ் குறித்து பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து இன்ஸ்டாகிராமில் பதிவினை வெளியிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து இயக்குநரும் நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் இன்ஸ்டாவில் தனுஷ் குறித்து பதிவிட்டுள்ளார். .
அந்தப் பதிவில் இயக்குநர் விக்னேஷ் சிவன், "வாழு, வாழ விடு. ஓம் நமச்சிவாய. இவ்வளவு நாள் எல்லவற்றையும் நம்பியிருக்கும் அப்பாவியான ரசிகர்களுக்கு இதைச் சொல்கிறோம். மற்றவர்களின் மகிழ்ச்சியில் இன்பத்தை காணுமாறு மக்கள் மாறவேண்டுமென கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.மேலும் இதில் நடிகர் தனுஷ் பேசும் விடியோவுடன் தனுஷ் அனுப்பிய நோட்டீஸையும் வெளியிட்டுள்ளார்.