பா. ரஞ்சித்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த திருமாவளவன்
|இயக்குனர் பா. ரஞ்சித்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
பா.ரஞ்சித், தனது ஒவ்வொரு படங்களிலும் வெவ்வேறு கதைக்களத்தில் அரசியலை மையமாக வைத்து படம் இயக்கி வருகிறார். கபாலி, காலா, மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்தவர் பா.ரஞ்சித். சில மாதங்களுக்கு முன் சீயான் விக்ரம் நடிப்பில் தங்கலான் திரைப்படத்தை இயக்கினார்.
இந்நிலையில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் இயக்குநர் பா.ரஞ்சித். அவருக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், எக்ஸ் தளம் மூலமாக இயக்குநர் பா.ரஞ்சித்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இன்று பிறந்தநாள் காணும் திரைக்கலை இயக்குநர் அன்பு இளவல் ரஞ்சித்திற்கு எமது மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்" என குறிப்பிட்டு ரஞ்சித்தை டேக் செய்துள்ளார். இதற்கு "நன்றி அண்ணா" என ரஞ்சித் பதிலளித்துள்ளார்.