வைரலாகி வரும் திரு மாணிக்கம் படத்தின் இசைக்கோர்வை வீடியோ
|நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ள 'திரு.மாணிக்கம்' படத்தின் இசைக்கோர்வை வீடியோ வெளியாகி உள்ளது.
சென்னை,
இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ள திரைப்படம் 'திரு.மாணிக்கம்'. நடிகை அனன்யா இந்த படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இயக்குனர் பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
'சீதா ராமம்' படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடலாசிரியர்கள் சினேகன், சொற்கோ மற்றும் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.பி.ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் இணைந்து தயாரித்துள்ளனர்.
படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் இசைக்கோர்வை வீடியோ வெளியாகியுள்ளது. இந்த இசைக்கோர்வை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.